pudukkottai mangadu

wellcome on my site raja,pudukkottai,mangadu

Wednesday, July 13, 2011

அணுவின் உட்கருவில் புதிய கண்டுபிடிப்பு!

wellcome on my site

அணுவின் உட்கருவில் புதிய கண்டுபிடிப்பு!
-எஸ்.விஸ்வநாதன்


            ண்டத்தின் அனைத்துப் பருப்பொருள் களின் மிகச்சிறிய அடிப்படை அலகு அணு. அணுவின் மையப் பகுதியான உட்கருவில் மின்சுமையற்ற நியூட்ரானும் நேர்மின் சுமையுடைய புரோட்டானும் அடங்கி யுள்ளன. புரோட்டான்களின் சம எண்ணிக்கையிலான எதிர்மின் சுமையுடைய எலக்ட்ரான்கள் உட்கருவைச் சுற்றுப்பாதையில் சுற்றுவருகின்றன. எலக்ட்ரான்கள் மற்றும் புரோட்டான்களின் மின்சுமை சம எண்ணிக்கையிலிருப்பதால் நடுநிலை மின்சுமை கொண்ட பல்வேறு தனிமங்கள் இயற்கையில் நிலைத்தருகின்றன. தனிமங்களின் அணு அமைப்பில் மிகச் சாதாரணமான அமைப்பினைக்கொண்டது ஹைட்ரஜன். இதன் அமைப்பில் ஒரு எலக்ட்ரான் ஒரு தனித்த புரோட்டானைச் சுற்றி வருகிறது. 

புரோட்டான் ஒரு புள்ளியினைப் போன்ற அமைப்பினையுடையதல்ல. மாறாக, ஒரு மீட்டரை ஒரு பில்லியன் (10-9மீ) சம பகுதி களாகப் பிரித்து, அதில் ஒரு பகுதியை 1 மில்லியன் (10மீ) சம பகுதிகளாக மீண்டும் பிரித்துக்கிடைக்கும் மிக நுண்ணிய பகுதி (10-15மீ) ஒரு புரோட்டானின் அளவு. இது ஃபெம்டோ மீட்டர் (10-15மீ) என்ற அலகால் குறிக்கப்படுகிறது. புரோட்டான் மின்ன மின்சுமை கொண்ட குவார்க்குகள் மற்றும் சுமையற்ற குளுவான்கள் ஆகியவற்றின் கலவையிலான, நிரந்தரமான பரப்பினைக் கொண்ட துணை அமைப்பினைக் கொண்டுள்ளது.  இதனால் இதனை எளிதில் கண்டுணரமுடியாது. ஆனால், புரோட் டான்களின் அமைப்பிலும், அதன் செயல் பாடுகளிலும் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு இதனை அறியமுடியும். 

ஒரு ஹைட்ரஜன் அணுவில் நேர்மின் சுமையுடைய புரோட்டான் எதிர் மின் சுமை கொண்ட எலக்ட்ரானை ஈர்க்கிறது. குவாண்டம் தத்துவத்தின் அடிப்படையில், எலக்ட்ரான்கள் தங்களின் தனித்தனியான ஆற்றல் நிலையைப் பொருத்து வெவ்வேறு ஆர்பிட்டல்களுக்கு நகரக் கூடியவை. எலக்ட் ரான்கள் அருகிலுள்ள உயர் ஆர்பிட்டல்களுக்கு தாவும்போது ஆற்றலை உறிஞ்சிக்கொள்வதனால் அதன் ஆற்றல் அதிகரிக்கிறது. மேலும், கீழ்நிலை ஆர்ப்பிட்டல்களுக்கு தாவும்போது ஆற்றல்களை போட்டோன்களாக வெளிவிடு கிறது. இதனால் எலக்ட்ரான்கள் ஆற்றலை இழக்கிறது. போட்டோன்கள் உமிழப்படும் கால இடைவெளிகளைப் பொருத்து ஆற்றல் மட்டங்களின் ஆற்றல் வித்தியாசம் அமைகிறது. எலக்ட்ரான்களின் சுற்றுப்பாதை (ஆர்பிட்) உண்மையில் அறுதியான பாதை   அல்ல. உட்கருவினைச் சுற்றியமைந்த மங்க லான, மேகக்கூட்டம் நீள்வட்டவடிவில் பரவி யுள்ளதனைப் போன்ற அமைப்பு. 

புரோட்டான் கனகச்சிதமான கோளவடிவ அமைப்பினைக் கொண்டதல்ல. மாறாக, ஒரு மங்கலான பந்து போன்ற அமைப்பு. அதனுள்ளே மையப் பரப்பில் நேர்மின்சுமை அதிக அளவிலும், புறப்பரப்பில் மின்சுமை பூஜ்ஜியமாகவும் (சுழி) காணப்படும். ஆகவே புரோட்டானின் ஆரம் என்பது நேர் மின்சுமை பரவியிருக்கும் ஆரத்தினையே குறிக்கும். 

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவிய லார்கள் குழு நுண்ணிய புரோட்டானின் அளவானது முன்னர் கருதியிருந்த  தினைக்காட்டிலும் மிக மிக நுண்ணியது என்பதனை தற்போது கண்டறிந்துள்ளனர். மேலும் மிக நுணுக்கமான, உயர் தொழில் நுட்பம் கொண்ட லேசர் நிறமாலை மானியின் உதவியுடன் புரோட்டானின் ஆரத்தைக் கணக் கிட்டுள்ளனர். இதுவரை, புரோட்டானின் ஆரம் கணக்கிடப்பட்டதில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தரவு குழு   (ஈஞஉஆபஆ) கணக்கீடு செய்த 0.8768 ஃபெம்டோ மீட்டர் (0.0069 ஃபெம்டோ மீட்டர் நிலையில்லாத் தன்மையுடன்) அளவுதான் சிறந்த மதிப்பாக கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்போது லேசர் நிறமாலை மானியின் உதவியுடன் புரோட்டானின் ஆரம் 0.84184 ஃபெம்டோ மீட்டர் என கணக் கிடப்பட்டுள்ளது. இது முந்தைய மதிப்பைக் காட்டிலும் 0.0350 பெ.மீ குறைவு. மட்டுமன்றி 0.00067 பெ.மீ நிலையிலா தன்மையைக் கொண்டது. இது 10 மடங்கு மிக நுட்பமான கணக்கீடு. எதிர்பார்க்கப்பட்ட மதிப்பினைக் காட்டிலும் 4% குறைந்த மதிப்பு இந்த கண்டுபிடிப்பு பௌதிக அறிவியல் உலகில் புது நம்பிக்கையை விதைத்துள்ளது. 4% வித்தியாசம் என்பது விஞ்ஞான உலகில் சாதாரணமான ஒன்றுதான். ஆனால் இத்தகைய நுட்பமான கணக்கீடுகளும், முடிவு களும் நாம் இதுவரை கற்றறிந்த பௌதிக அறிவியலின் அடிப்படை கோட்பாடுகளுக்கு சவால் விடுப்பதாக இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் அறிவியலின் பல்வேறு அடிப்படை தகவல்கள் (தரவு) மாறக்கூடும் வாய்ப்பு இருக்கிறது.


எலக்ட்ரான்களின் சார்பியல் விளைவு களுக்கான டிரக் சமன்பாடுகள், ஹைட்ரஜன் அணுவிலுள்ள 2ள் மற்றும் 2ட ஆர்பிட்டுகளில் எலக்ட்ரானின் ஆற்றல் சமஅளவில் இருத்தல் வேண்டும் என கூறுகிறது. ஆனால் 1947-இல் ர.ஊ. லாம்ப் மற்றும் த.ஈ ரெதர்ஃபோர்டு ஆகியோர், இவ்விரு ஆர்ப்பிட்டல்களின் ஆற்றல்களுக்கிடையே சிறிய மாற்றம் இருப்பதை கண்டறிந்தனர். இவ்வகையான2நலி2டகளுக்கிடையேயான ஆற்றல் வித்தியாசம் "லாம்ப் மாற்றம்' என்றழைக்கப்படுகிறது. லாம்ப் மாற்ற கண்டுபிடிப்பு குவாண்டம் மின்னியக்கம் குறித்த ஒரு முழு நீள கோட்பாடு உருவாக வழிவகை செய்தது. நுட்பமான நிறமாலைமானி உருவாக்குவதன் தேவை இங்கிருந்துதான் துவங்கியது. "ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க்' நிறுவனத்தில் குவாண்டம் ஆப்டிக்ஸ் துறையில் பணிபுரியும் தியோடர் ஹான்ச் என்ற அறிவியலர் முதன்முதலில் லேசர்-அதிர்வு சீப்பு நுட்பம் என்ற அபரிமிதமான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். இந்த லேசர் நிறமாலைமானி நுட்பத்திற்கு 2005-ஆம் ஆண்டு இவருக்கு பௌதிகத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது. இத்தொழில்நுட்பத்தில் ஓரியல் பண்பினைக்கொண்ட, ஒரு கற்றை லேசர்  அலைகளை மிகக்குறுகிய நேர இடை வெளிகொண்ட, (10-15 எப்.எம்) துடிப்புகளாக தொடர்ச்சியாக செலுத்தப்படும். இவ்வகையன இருவேறு லேசர் கற்றைகளை குறுக்கீடு செய்யும்போது ஏற்படும் குறுக்கீட்டு பட்டைகள் ஒன்றுக்கொன்று சம இடைவெளியிலான, மிகக் கூர்மையான லேசர்- அதிர்வுக் கோடுகளை (சீப்பினைப் போன்று) உருவாக்குகிறது. இந்த கோடுகள், அதிநுட்பமான அளவீட்டிற்கும், ஒப்பீட்டிற்கும் பயன்படக்கூடியது. 

ஹைட்ரஜன் அணு போட்டான்களை உட்கவர்ந்து கிளர்ச்சி நிலையை அடையும் போது, எலக்ட்ரான்களின் ஆற்றலானது அடிநிலையான 1ந-லிருந்து உயர் ஆற்றல் நிலையான 2ந-க்கு உயர்த்தப்படுகிறது. மேலும் எலக்ட்ரான்களின் ஆற்றல்  அதன் சுழற்சியினாலும் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக எலக்ட்ரான்களின் ஆற்றல் நிலைகள் மிகத்துல்லியமாக பிரிக்கப் படுவதுடன்புரோட்டானின்  அளவு கன கச்சிதமாகவும் இருக்கும். இவ்வகை புரோட்டான்கள் மிக அருகே இருக்கும் 1ந ஆர்பிட்டல்களை அதிக               அளவில் பாதிக்கும். ஆனால் ட- ஆர்பிட்டல் களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் ட -ஆர்பிட்டல்கள் இரட்டை மணி நாவு (உன்ம்க்ஷ க்ஷங்ப்ப்) வடிவமுடையது. மிக குறைந்த அளவிலேயே புரோட்டான் மேகமும்  ட -ஆர்பிட்டலும் ஒன்றிற்கொன்று மேற்படிகிறது. ஆனால் ள்லிஆர்பிட்டல் எலக்ட்ரான்கள் புரோட்டான் மேகத்தின் மீது குறிப்பிடத்தக்க அளவில் மேற் பொருந்துமாறு அமைவதால் புரோட் டானின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதன் விளைவாக எலக்ட்ரான்கள், புரோட்டான் மேகத்தின் வழியாக வேகமாக பறக்கும்போது எலக்ட்ரானின் எதிர்மின் சுமையும், புரோட்டானின் நேர் மின் சுமையும் இணைந்து நடுநிலையாகிறது. இத்தகைய தருணங்களில், எலக்ட்ரான் மீதான புரோட்டானின் ஈர்ப்பு விசை குறைவதனால் அதன் ஆற்றல் நிலையும் குறைகிறது. குவாண்டம் மின்னியக்க கணக்கீடுகள் மூலம் இதன் மதிப்பை அறிய முடிகிறது. மேலும் ஆற்றல் மட்டங்களைப் பற்றிய குவாண்டம் மின்னியக்க சமன்பாடுகள், புரோட்டான் களின் ஆரத்தைப் பொருத்து அமைகிறது.

தற்போதைய சோதனைக்கு முன்னர் அதிநுட்ப நிறமாலை மானியன் உதவியுடன் செய்யப்பட்ட அளவீடுகளில் (புரேட்டானின் ஆரம்) நிலையில்லாத் தன்மையின் மதிப்பு சில வரையறைகளுக்குட் பட்டதாகவே இருந்தது. ஹைட்ரஜன் அணுக் களில் மேற்கூறப்பட்ட பாதிப்பு குறைவாக இருப்பதனால் மிகச்சரியான அளவீடுகள் துல்லியமான நிலையில்லாத்தன்மையை பெற்றுள்ளது. நாம் பயன்படுத்தும் பொருட் களின் நிலை மற்றும் திசைவேகத்தை குறிப் பிட்ட நேரத்தில் துல்லியமாக கணக்கிட முடியும். ஆனால் புரோட்டான் போன்ற நுண்துகள்களின் நிலை மற்றும் திசை வேகத்தை ஒரே நேரத்தில் அளவிட முடியாது. அதனால், நிலையில்லா கோட்பாட்டின்படி, நுண்துகள்கள் அவற்றின் ஒவ்வொரு அளவிலும் நிலையில்லாத்தன்மையை கொண்டுள்ளது. ஈஞஉஆபஆ மதிப்பீடு செய்த ஹைட்ரஜன் ஆற்றல் மட்டங்களுக்கான மதிப்பீடுகள் அனைத்தும் யூக அடிப்படையில் (கோட்பாடுகளின்) உருவான கணக்கீடுகளே.

தற்போதைய ஆய்வுகள், நிலையில்லாத் தன்மையின் அளவினை ஒரு பகுதி வரை  குறைத்துள்ளது எனலாம். இந்த சாதனை வழக்க மான வகை ஹைட்ரஜன் அணுவில் நிகழ்த்தபடவில்லை. மியூவானிக் ஹைட்ரஜன் அணுவினைக் கொண்டுதான் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டது. மியூவானிக் ஹைட்ரஜன் அணுவில் எலக்ட்ரானுக்கு பதில் மியூவான் புரோட்டானை சுற்றிவரும். உண்மையில் மியூவான், எலக்ட்ரானின் ஒரு கனமான சகோதரன் எனலாம். எலக்ட்ரானின் பண்பு களையே ஒத்திருக்கும்.ஆனால் அதனைப்போல் 207 மடங்கு கனமானது. இதனால் அணுவின் மொத்த விட்டமானது குறையும். இவ்வாறு குறைவதற்கு அதன் நிறை ஒரு காரணி (ஆர்ப்பிட்டின் அளவும் அணு வின் நிறையும் ஒன்றுக்கொன்று எதிர் விகிதத்தில் இருக்கும்) இதனால் மியூவானின் ஆர்பிட்டல் புரோட்டானின் மீது மேற் பொருந்தும்  அளவு மிக அதிகமாக இருக்கும். ஆகவே இதனுடைய ஆர்பிட்டல்கள், குறிப்பாக ந ஆர்பிட்டல்கள், புரோட்டானின் அளவினைப் பொருத்து அமைகிறது. இதனால் புரோட்டானின் அளவிற்கேற்ப ந மட்டங்களின் ஆற்றல் சாதாரண ஹைட்ரஜன் அணுக்களில் இருப்பதனைக்காட்டிலும் குறைவாகவே காணப்படுகின்றன. தற்போதைய ஆய்வுகள் லாம்ப் மாற்றத்தின் (2ள்லி2ட ஆற்றல்) வேறுபாடு) அடிப்படையிலேயே மியூவானிக் ஹைட்ரஜன் அணுவில் புரோட்டானின் ஆரத்தை கணக்கிட வடிவமைக்கப்பட்டவை. கடந்த 40 ஆண்டுகளில் லாம்ப் மாற்ற அளவீட்டு முறை புரோட்டான் ஆரத்தின் துல்லிய மதிப்பை காண வழிவகுத்தது எனலாம். மேலும் சமீபகால மியூவான் கற்றைகளை உருவாக்குவதில் ஏற்பட்ட முன்னேற்றம், லேசர் தொழில்நுட்பம் போன்றவை இதனை சாத்தியப்படுத்தியது. சுவிட்சர்லாந்தின் பால் செர்ரர் ஆராய்ச்சி நிறுவனம் மியூவான் கற்றைகளுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியது. அதேசமயம் கார்ச்சிங் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகம் லேசர் தொழில் நுட்பத்தை (நிறமாலை மானி) உருவாக்கித் தந்தது.


மியூவானிக் ஹைட்ரஜன் அணு அதன் 2ள் நிலையில் (மாற்றம் நிகழக்கூடிய நிலை) 6 மைக்ரோமீட்டர் அலைநீளமுள்ள குறுகிய  அகச்சிவப்பு கதிர் வீச்சிற்குட்படுத்தப்படும் போது (மியூவானிக் லாம்ப் மாற்ற ஆற்றல் வேறுபாட்டிற்கு இணையான அலை நீளம்) மியூவானிக் லாம்ப் மாற்ற ஆற்றல் வேறு பாட்டிற்கு இணையான அலைநீளம்) மியூ வான்கள் 2ள் ஆற்றல் மட்ட நிலையிலிருந்து உயர் 2ட நிலைக்கு கிளர்வுறுகிறது. 2ட நிலை யில் மியூவான்களின் ஆயுட்காலம் 8.5 பைக்கோ வினாடி நேரம் மட்டுமே.                      அதனால் உடனடியாக அது 1ள் ஆற்றல் மட்ட நிலைக்கு திரும்பிவிடும். அவ்வாறு 1ள் நிலை யிலிருந்து 2ட நிலைக்கு திரும்புபோது எவ்வளவு எண்ணிக்கையிலான மியூவான்கள் 1.9 கிலோ எலக்ட்ரான் வோல்ட் ல கதிர்களை உமிழ்ந்து கிளர்ச்சியினை இழக்கிறது என்பதனைக் கண்டறியப்படுகிறது. 2டலி1ள் மாற்றம் நிகழும் அதே நேரத்தில் லேசர் நிறமாலை மானியின் லேசர் துடிப்புகளை 6 மைக்ரோமீட்டர் அளவிற்கு திருப்பி, மியூ வான்கள் 2ட ஆர்ப்பிட்டல்களிலிருந்து 1ள் ஆர்ப்பிட்டல் நிலைக்கு மாறும் வேகத்துடன் ( கால இடைவெளி) இணக்கமடையச்செய்து) 2ள்லி1ட மாற்றங்களின் எண்ணிக்கை கணக் கிடப்படுகிறது.

இந்த கடினமான செயல்முறைப்படிகளைக் கடக்க மிகவும் துல்லியமான தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. முதலில் மியூவானிக் ஹைட்ரஜன் அணுவினை உருவாக்க வேண்டும். பால் செர்ரர் இன்ஸ்டிடியூட் மட்டுமே தேவை யான அடர்த்தியினைக் கொண்ட (வினாடிக்கு 500) குறைந்த ஆற்றலுடைய (3-6 கி.எ.வோ) மியூவான்களை உருவாக்கும் சைக்ளோட்ரான் முடுக்கிகளைப் பெற்றுள்ளது. முடுக்கிகளிலிருந்து மியூவான்களைப் பிரித்தெடுத்து மிகக் குறைந்த அடர்த்தி நிலையிலுள்ள (1மில்லி பார்) ஹைட்ரஜன் வாயுவினை நோக்கி செலுத்தப்படுகிறது. எதிர்குறியினையுடையே மியூவான்களை பிடிப்பதன் மூலம் கிளர்ச்சி நிலையிலுள்ள மியூவானிக் ஹைட்ரஜன் உருவாக்கப்படுகிறது. ஆனால் உருவான மியூவானிக் ஹைட்ரஜனில் 99% கிளர்ச்சி நிலையை இழந்து (100 நானோ வினாடி நேரத்தில்) அடிநிலையை ந நிலையை                    அடைந்துவிடுகிறது. மீதி 1% மியூவான்கள் இடைநிலையான 2ந நிலையில் தங்கிவிடுகிறது. இடைநிலையில் தங்கியிருக்கும் மியூவான்களின் ஆயுட்காலம் தான் ஆய்வில் மிக முக்கிய காலகட்டம். வெளியில் மியூவான்களின் ஆயுட்காலம் 2.2 மைக்ரோ வினாடிகள். ஆனால் ஹைட்ரஜன் வாயுவில், 1மி.பார் அடர்த்தியில், மியூவான்களிடையே ஏற்படும் மோதலின் காரணமாக இது 1 மைக்ரோ வினாடியாக குறைகிறது. இதிலிருந்து இந்த ஆராய்ச்சியின் கடினத்தன்மையை உணரலாம். செலுத்தப்படும் லேசர் கதிர்களின் துடிப்புக்கும், சுமார் 2.கி.எ.வோ ல கதிர்களின் எண்ணிக்கைக்குமிடையே (நிகழ்வு) வரைபடம் வரையும் போது ஒரு ஒத்ததிர்வு வளைகோடு (ஸ்ரீன்ழ்ஸ்ங்) கிடைக்கிறது. அவ்வளைகோட்டின், உச்சியின் நடுப்பகுதி புரோட்டானின் ஆரம் என முடிவுசெய்யப்பட்டது. 

இக்கண்டுபிடிப்பின் விளைவாக, பௌதிக அறிவியலில் முக்கியமான அடிப்படை மாறிலிகளை நிர்ணயிக்க கூடியதும், அணுக்களில் ஆற்றல் மட்டங்களுக்கு அளவுகோலாக விளங்கக்கூடியதுமான ரிட்பெர்க் மாறிலியை மாற்ற வேண்டியிருக்கும். லாம்ப் மாற்ற முறையின் மூலம் அளவிடப்பட்ட புரோட்டான் ஆரத்தைக் கொண்டு கணக்கிடப்படும் ரிட்பெர்க் மாறிலியின் மதிப்பு 4.6 மடங்கு அதிக துல்லியமாகவும், 4.6 (சராசரி மாற்றம்) அளவு ஈஞஉஆபஆவின் மதிப்பிலிருந்து மாறுபட்டும் இருக்கும்.

இதுவரை புரோட்டான் ஆரத்தினைப் பற்றி பல்வேறு கோட்பாடுகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. ஆனால் இதற்கு அறிவியல் ரீதியில் நிரூபணம் இல்லை. புரோட்டானின் அளவு இவ்வளவுதான் இருக்கும் என்பதற்கு புரோட்டானின் அளவு இவ்வளவுதான் இருக்கும் என்பதற்கு எவ்வித தரச்சான்றும் இல்லை. தற்போது புரோட்டானின் அளவு பற்றிய துல்லியமான மதிப்பீடு அறிவியலர் களின் கணக்கீடுகளை சரிபார்க்க வழிவகை செய்துள்ளது. இந்த முடிவுகள் பௌதிகத் துறையில் புதியதோர் கிளையை தோற்றுவிக்கக் கூடும் என லாம்ப் மாற்ற கணக்கிடுகள் பற்றி பல ஆண்டுகளாக ஆய்வு செய்துவரும் செஸ்டோவ் பசுகி என்னும் பௌதிகவியலர் கூறுகிறார்.

அணுக்களால், எலக்ட்ரான் - பாசிட்ரான் ஜோடிகள் அதிக அளவில் உருவாவதினைப் போல், மியூவான் அணுவின் உள்ளேயே எதிரெதிர் மின்தன்மையுள்ளவைகளுக் கிடையேயான தற்காலிக ஒற்றுமை அதிகரிக்கும். இது புரோட்டானின் ஆரத்தில் மாற்றம் ஏற்படுத்தாமல் லாம்ப் மாற்ற ஆற்றல் வேறுபாட்டினை இல்லாமலாக்கும். இது கவனத்தில் கொள்ளபடாமல் புரோட்டானின் ஆரம் கணக்கீடு செய்யப்பட்டால் அது பிழை கொண்டதாக இருக்கும். புரோட்டானின் இவ்வகை சிக்கலான அமைப்பு அதன் ஆரம் கணக்கிடுவதில் பிழைகளை ஏற்படுத்த காரணமாகிறது. பௌதிகவியலர்களுக்கு புரோட்டான் மற்றும் மியூவான்களுக்கிடை யேயான மின்காந்த் விசைகளை கணக்கீடுகளில் கையாளுவது மிகவும் கடினமாக இருக்கிறது. இவ்விருவற்றிற்குமிடையேயான செயல்பாடுகளை பிரித்தறிவது, மியூவான் புரோட்டானை எவ்வாறு பாதிக்கிறதென்பதனைக் கண்டறிவது ஆகியவை அறிவியலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டு மென அறிவியலர் ருதால்ப் பாஸ்டவ் கூறு கிறார். இக்கண்டுபிடிப்பு புரோட்டானின் சிக்கலான அமைப்பை அறிந்துகொள்ள வழிவகை செய்ததுடன், புரோட்டானின் ஆரத்தின் தரமதிப்பினை நிர்ணயித்துள்ளது.

No comments:

Post a Comment