pudukkottai mangadu

wellcome on my site raja,pudukkottai,mangadu

Monday, July 18, 2011

சுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கறுப்பு பணம் ரூ. 11,250 கோடி


சுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கறுப்பு பணம் ரூ. 11,250 கோடி

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ. 11,250 கோடிக்கு மேல் இருப்பதாக சுவிஸ் மத்திய வங்கி அறிவித்துள்ளது. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ. 20 லட்சம் கோடி முதல் ரூ. 50 லட்சம் கோடி வரை இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள், அரசு சாரா நிறுவனங்கள் மதிப்பிட்டு தெரிவித்திருந்தன.

இந்நிலையில், இந்தியர்களின் பணம் ரூ. 11,250 கோடி மட்டுமே தங்கள் நாட்டு வங்கிகளில் இருப்பதாக தேசிய வங்கிகளின் தலைவர் வால்டர் மேயர் தெரிவித்துள்ளார். எங்கள் நாட்டு வங்கிகளின் இந்த ஆண்டுகளுக்கான புள்ளி விவரத்தின்படி இந்தியாவைச் சேர்ந்தவர்களின் பணம் ரூ.11,250 கோடிக்கு மேல் பல்வேறு வங்கிகளில் உள்ளது. 2009 ம் ஆண்டு இது ரூ.12,150 என்ற அளவிலும், 2008 ல் இது ரூ.13,500 கோடியாகவும் இருந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment