புதுக்கோட்டை
புதுக்கோட்டையைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால், வாழ்ந்து கெட்ட ஊர்! கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைப்பெயர்களுடன் சதுரமாக, ராஜ வீதிகள்! அதன் உள்ளே பழைய அரண்மனை மற்றும் கோவில்! ஒவ்வொரு ராஜவீதிப்பக்கமும், 4 தொடர் வீதிகள். ஒவ்வொரு வீதியும் ஒன்றையொன்று சந்திக்குமாறு அமைந்த தெருக்கள். அந்தக்காலத்திலேயே கழிவுநீர் வாய்க்கால் வசதி மிகச்சிறப்பாக மன்னராட்சி நடந்த பகுதி இப்போது நாடாளுமன்றத்தொகுதி அந்தஸ்து கூட இல்லாமல் தடுமாறுகிறது.
மற்றபடி கலைகளில் ஆர்வமும், ஆச்சர்ய மனிதர்களும் நிறைந்த அற்புதமான ஊர்! வடிவமைத்து நிர்மாணிக்கப்பட்ட மிகச்சில இந்திய நகரங்களில்
இதுவும் ஒன்று!
இங்கு பார்ப்பதற்கும் பழகுவதற்கும் ஏராளமான அற்புத நபர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இந்த நகரத்தையும், மாவட்டமும் சார்ந்த நமது புதுகைத்தென்றல், அப்துல்லா, புதுகைச்சாரல், பாண்டியன், தெக்கிக்காட்டான், சுந்தரவடிவேல் போன்ற பதிவுலக நண்பர்களும் அடக்கம்!
நேர்மையைப் பிரதிபலிக்கும் நாமக்கல் கலெக்டர் திரு.சகாயம் அவர்கள் ,மகசேசே விருது வாங்கியிருக்கும் அடையாறு கேன்ஸர் இன்ஸ்ட்டிட்யூட்டின் டாக்டர் சாந்தா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்துக்காரர்கள்.
பி.யு.சின்னப்பா, ஜெமினி, ஏவிஎம் ராஜன், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி என இன்னும் புதுக்கோட்டையின் பிரபலமானவர்களைப்பற்றி இணையம் நிறையச்சொல்லும்.
நட்சத்திரவாரத்தை மனதில் கொண்டு நான் எடுத்த புகைப்படங்கள் சில..
புதுகையின் பெருமைக்காக!
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்
பேருந்து நிலையம்!. எம் ஜி ஆர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்று!
கீழ ராஜ வீதி.
புதிய அரண்மனை. இங்குதான் இப்போது அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கலெக்டர் அலுவலகம் இதற்குப்பின்னால்....
புதிய அரண்மனையின் மேலிருந்து...
நகராட்சிக்கட்டிடம்
இழந்தது போதும்...எழுந்து நிற்போம்!
புதுக்கோட்டை நாடாளுமன்றத்தொகுதி—தொகுதி மறு சீரமைப்பில் கலைக்கப்பட்டு அருகிலுள்ள தொகுதிகளோடு இணைக்கப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையத்தின் முடிவுப்படி இனிமேல் புதுக்கோட்டைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்து இல்லை!
புதுக்கோட்டை- இந்தியாவிலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்று!ஒரு சமஸ்தானமாக தனி ஆட்சி செய்த பெருமையும் உண்டு! சுதந்திரத்துக்குப்பின்னர் இயற்கை வளம் இல்லாததால் பின் தங்கிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டு அதற்கான சலுகைகளை அனுபவிக்கக்கூட முடியாமல் வழிவழியாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது !
இம்மாவட்ட எல்லைக்குள் இருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்..புதுக்கோட்டை மாவட்டம் என்று தன் முகவரியில் போட்டுக்கொள்வதில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் இருக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளையும் புதுகையோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. திருச்சி கிளை என்றே கூறிக்கொள்கிறார்கள்.ஆட்சியாளர்களும் அதைக்கண்டுகொள்ளவில்லை. நாமும் பெயரில் என்ன இருக்கிறது. நம் மாவட்டத்தில்தானே உள்ளது என்று விட்டுவிட்டோம்.
புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் இருக்கும் மாத்தூர் தொழிற்பேட்டையின் அனைத்து தொழிற்சாலைகளும் பின் தங்கிய மாவட்டத்திற்கான அனைத்து சலுகைகளையும் பெற்று இடம் பெற்றுக்கொண்டு, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு எந்த பயனையும் அளிக்காமல் செயல்பட்டு வருகின்றன.
இப்படியே படிப்படியாய் நம் சகிப்புத்தன்மையை ஆழம் பார்த்தவர்கள் இப்போது தொகுதியிலும் கைவைத்திருக்கிறார்கள். ஒரு தேசமாக, தனியாக ஆட்சிபுரிந்த ஒரு நகரம் சார்ந்த மாவட்டத்தை துண்டு துண்டாக்கி மற்ற தொகுதிகளோடு இணைத்திருக்கிறார்கள். இதையும் புதுகை மாவட்ட மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்! இனியும் பொறுமையாக இருக்க புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மக்கள் தயாராக இல்லை! ஏனெனில் அடுத்ததாக நாடாளுமன்றத்தொகுதிகளை அப்படியே மாவட்டமாக அறிவித்தால்...புதுக்கோட்டை தன் கடைசி அடையாளமான மாவட்டம் என்ற பெயரையும் இழந்து நிற்கும்.....
பின்னர் மன்னர் ஆண்ட ஊர் மாவட்டத்தையும் இழந்த கதையாகிவிடும்.
பத்து லட்சம் மக்கள்தொகை இருந்தால்தான் நாடாளுமன்றத்தொகுதி என்கிறார்கள். மக்கள்தொகை அந்த அளவு இல்லையென்றே வைத்துக்கொள்வோம். இவ்வளவு பாரம்பரியம் மிக்க மாவட்டத்துக்கு விதிவிலக்கே கிடையாதா? அப்படியே இல்லையென்றாலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவேண்டி பிரச்சாரம் செய்யும் அரசே, புதுக்கோட்டை மட்டும் கட்டுப்பாடில்லாமல் மக்கள்தொகையை அதிகப்ப்டுத்திக்கொண்டால் பாராளுமன்றத்தொகுதி கிடைக்கும் என்கிறதா? உலகத்தில் பாரம்பரியத்துக்கு எப்போதும் ஒரு மரியாதை கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நாட்டுக்குள்ள எந்த ஒரு அடையாளமும் இல்லாத வாட்டிகன் என்ற நகரம் தனி நாடாக அறிவிக்கப்பட்டிருப்பது இதை ஒட்டித்தான். பின் இவ்வளவு நாள் எதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தொகுதியாக இருந்தது.?
நாங்கள் கேட்பதெல்லாம் எங்கள் தொகுதியை எங்களிடமிருந்து பறிக்காதீர்கள்!
புதுக்கோட்டை நாடாளுமன்றத்தொகுதி மக்கள் இனியும் பொறுக்கப்போவதில்லை. இதை தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் மீண்டும் வெவ்வேறு போராட்டங்கள் மூலம் வலியுறுத்தப்ப்ட்டு வருகிறது. எது நடந்தாலும் ஒரு பாரம்பரியம் மிக்க பகுதி தன் அனைத்து அடையாளங்களையும் இழந்து நிற்பதை இங்கிருக்கும் மனிதர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது

No comments:
Post a Comment