pudukkottai mangadu

wellcome on my site raja,pudukkottai,mangadu

Tuesday, March 29, 2011

மாங்காடு;வருவான் தமிழன்


இளைஞர்கள் இரண்டுபேர்!



       ஒரு சில விஷயங்கள்  நடக்கும்போது கேயாஸ் தியரிபோல்,ஒன்றுக்கொன்று சம்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள மனம் தானாக முயல்கிறது.


         ஊழல் நிறைந்துபோய்எதற்கெடுத்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடி, ஒவ்வொரு சராசரிக் குடிமகனும் நொந்துபோய் வாழ்ந்துகொண்டிருந்த துனிசியாவில், இராணுவ வேலைக்கு முயன்று அதுவும் லஞ்சமில்லாமல் முடியாது என்ற நிலையில் காய்கறிவண்டி வைத்து பிழைப்பு நடத்துகிறான்Mohamed Bouazizi  என்ற அந்த இளைஞன். அன்று அங்கு வந்த பெண் போலீஸ் அதிகாரி, மாமூல் குறைவாகக் கொடுத்தான் என்று அவனது வண்டியை பறிமுதல் செய்து, இன்னும் இரு பெண் போலீஸ்களுடன் சேர்ந்து காறி உமிழ்ந்து அவமானப்படுத்துகிறார்கள்.வெகுண்டுபோன அவன் கிளம்பி கவர்னர் அலுவலகம் சென்று முறையிடுகிறான். அங்கும் அவமானமே மிஞ்ச, தான் கொண்டு சென்ற பெயிண்ட் தின்னரை ஊற்றிக்கொண்டு தன்னையே கொளுத்திக்கொள்கிறான். இது மக்களிடையே வெறியேற்றுகிறது. அரசின் அகம்பாவத்தை எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். தன்னை எரித்துக்கொண்ட பதினெட்டு நாட்களில் அந்த இளைஞன் இறந்துபோகிறான். அவன் ஏற்றிவைத்த பொறி பற்றிக்கொள்கிறது. மக்கள் புரட்சி வெடிக்கிறது. ஒரு சர்வாதிகாரி அதிபராக அநியாய ஆட்சி நடத்திய பென் அலியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இவை அனைத்தும் அந்த இளைஞன் தன்னை எரித்துக்கொண்ட் டிசம்பர் 17 ம் தேதி ஆரம்பித்து, ஜனவரி 17ம் தேதியில் நடந்துவிடுகிறது.



அந்த தீக்குச்சி இளைஞன் முகமது பௌ அஸீஸி
     
ஒரு தனி இளைஞன் பற்றவைத்த நெருப்பு, பற்றிக்கொண்டு ஒரு நாட்டின் ஊழல் நிறைந்த ஆட்சியை முடிவுக்குக்கொண்டுவர 31 நாட்கள் எடுத்துக்கொண்டு, ஒரு ஓய்வுபோல், இடையில் 8 நாட்களுக்குப்பிறகு ஜனவரி 25ம்தேதி எகிப்தில் புரட்சியாக வெடிக்க ஆரம்பிக்கிறது. மக்கள் லட்சக்கணக்கில் ஒரே மைதானத்தில் கூடுகிறார்கள். போராட்டங்களின் உயிரிழப்புகளுக்குப்பிறகு புரட்சி இன்னும் வேகம்பிடித்து அதிபர் முபாரக்கை பதவியிறக்கி, தலைமறைவாக ஆக்குகிறது. இந்த இரண்டு புரட்சியிலும், பொதுமக்களின் கொந்தளிப்பும், பங்களிப்பும்தான் இப்படி ஒரு முடிவைத் தந்திருக்கிறது. மேலும் இதில் இணையத்தின் பங்கும் அதிகம் இருக்கிறது. இதோ அடுத்து பஹ்ரைனில் தொடங்கியிருக்கிறது. இது தொடரும் எனத்தெரிகிறது.




     இந்தப்படத்திலுள்ள இளைஞனும் ஒரு அராஜகத்தை நிறுத்துவதற்காகத்தான் உயிர் மாய்த்துக்கொண்டான். கொஞ்சம் கூட அசரவில்லையே நாம்! ஒரு நாள்கூட அவன் நோக்கத்துக்காக எல்லோரும் ஒன்று கூடவில்லையே?  அவன் நோக்கத்தை புதைத்துவிட்டு, ஆண்டுக்கணக்கில் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறோம். அதுக்கும்மேல, தமிழ்நாட்டு மீனவனைக் கொன்னா என்ன குறைஞ்சா போவுது? புரட்சியாவது..பொடலங்காயாவது…போங்க பாஸு! போய் ஓட்டுக்கு 1000 ரூபா சேத்துக்குடுப்பாங்களான்னு கேட்டுச்சொல்லுங்க!! நம்ப வீட்டில் நாலு ஓட்டு இருக்கு!

No comments:

Post a Comment