pudukkottai mangadu

wellcome on my site raja,pudukkottai,mangadu

Monday, March 25, 2013

சிலம்பம்


சிலம்பம்


சிலம்பம்


சிலம்பம்தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும்பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்என்றசொல் "சிலம்பல்என்ற வினையின் அடியாகப் பிறந்தது. "சிலம்பல்என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்என்பது பொருள்மலைப்பகுதிகளில் அருவி விழும் ஓசைபறவைகளின் கீச்சொலிமரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசைமிருகங்களின் இரைச்சல்போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்என்ற பெயருண்டுஎனவேமலை நிலக் கடவுளானமுருகனுக்கும், "சிலம்பன்என்ற பெயருண்டுகம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசைபோன்ற காரணங்களால்தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்என்ற பெயர் ஏற்பட்டதுநெல்லை மாவட் டத்தில் கடையநல்லூருக்குமேற்கே உள்ள மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்என்ற பெயரும் வழக்கில் உள்ளது.
சிலம்பம்தமிழர்களின் வீரவிளையாட்டுதிருக்குறளில் "கோல்என்ற பெயரிலும்கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே'என்ற வரிகள் மூலம், "தண்டுஎன்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளதுதிருவிளையாடற் புராணத்திலும்சிலம்ப விளையாட்டு பற்றியகுறிப்புகள் காணப்படுகின்றன.
கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணிஎன்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம்பித்தம்கபம் ஆகியநோய்கள் நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.இவைகளைத் தவிர கம்பு சூத்திரம்குறந்தடி சிலம்பம்நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளனஇச்சுவடியில் உள்ள பாடல்கள்அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கிறது.
அகத்தியர் தமிழகத்திற்குள் நுழைந்த காலம்ராமனின் வருகைக்கு முன்பாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்சுக்ரீவன் தென் பகுதியில்சீதையைத் தேடவானரங்களை அனுப்பும் போது பொதிகை மலையில் இருக்கும் அகத்திய முனிவரை வணங்கிச் செல்லுமாறுகட்டளையிடுகிறான்எனவேகி.மு., 2000க்கும் முன்பாக சிலம்பக் கலைக்குபொதிகை மலை அடிவாரத்தில் ஒரு பயிற்சிக்கூடம் இருந்துவந்துள்ளது என தெரிகிறது.
ஆனால்சிலம்பக் கலை பற்றிய அகழாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவைகி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளனஇவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன.
சிப்பி வளையல்கள்உலோகத் தொழிற்கலையில் வல்லவரும்ஜப்பானியத் தீவுகளை ஆய்வு செய்தவருமான பேராசிரியர் கௌலாண்ட், ""பெரும் எண்ணிக்கையிலான இரும்புப் படைக்கலங்கள்கருவிகள் மற்றும் இரும்பை உருக்கும் ஆழ்ந்த அறிவு ஆகியவைஇருப்பதிலிருந்து இரும்பை உருக்குதல் என்ற எதிர்பாரா நிகழ்ச்சிஇரும்புத் தொழில் ஐரோப்பாவைக் காட்டிலும்பழைய இரும்புக்காலத்தில் இடம் பெற்றிருந்த இந்திய தீபகற்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
சிலம்பத்தில் சுவடுதெக்கன் சுவடுவடக்கன் சுவடுபொன்னுச் சுவடுதேங்காய் சுவடுஒத்தைச் சுவடுகுதிரைச்சுவடுகருப்பட்டிச் சுவடு,முக்கோணச் சுவடுவட்டச் சுவடுமிச்சைச் சுவடுசர்சைச் சுவடுகள்ளர் விளையாட்டுசக்கர கிண்டிகிளவி வரிசைசித்திரச் சிலம்பம்,கதம்ப வரிசைகருநாடக வரிசை போன்றவை அடங்கும்.
கராத்தே என்ற வீர விளையாட்டின் "கடாஎன்ற போர்ப்பிரிவுதன் பெயரைப் பெற்றதற்குகதம்ப வரிசையைக் காரணமாக ஏற்கலாம்.இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றே.

"
கராத்தேஎன்ற பெயரிலும் "கரம்என்ற சொல் மூலமாக உள்ளதுகராத்தே வீரக் கலையின் தாய் குங்பூஇக்கலையை கி.பி.522ல் சீனா சென்றபல்லவ இளவல் புத்திவர் மன், (போதி தர்மன்புத்த துறவி களுக்கு கற்றுக் கொடுத்தார்.
சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள்தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று,தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் வடக்கன் களரிதெக்கன் களரிசுவடு அடி முறைகர்நாடகச் சுவடுசிரமம்சைலாத்,தஞ்சாவூர் குத்து வரிசைநெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.
சிலம்பத்தில் ஒத்தைச் சுவடுபிரிவுச் சுவடுரெட்டு வீச்சுபூட்டுப் பிரிவுமடு சிரமம்எடுத்தெறிதல்நெடுங்கம்படிகோபட்டாவாள் வீச்சு,பீச்சுவாசுருள்பட்டாலேசம்செண்டாயுதம்வளரிஇடிகட்டைகட்டாரிகண்டக்கோடாரிவீச்சரிவாள்வெட்டரிவாள்கல்துணி போன்றஆயுதப்பிரிவுகளும் உள்ளனஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும்கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும்சின்னமருது வளரிவீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர்மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., திரைப்படங்களின் வாயிலாக சிலம்பக்கலைக்குப் புத்துயிர்ஊட்டினார்சிலம்பத்தில் "வளரிஎன்ற எறி ஆயுதம் மருதுபாண்டியர் காலத்தில் வழக்கில் இருந்து வந்துள்ளதுஆங்கிலேயரை எதிர்த்துப்போரிட்ட மருது பண்டியர்வளரி வீசுவதில் வல்லவராய் விளங்கினார்.
சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட கர்னல் வெல்ஸ் என்பவர் எனது ராணுவ நினைவுகள் என்னும் நூலில், ""சின்ன மருது தான் எனக்கு ஈட்டிஎறியவும்வளரி வீசவும் கற்றுக் கொடுத்தான்வளரி என்னும் ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது.ஆற்றலும்திறமையுமிக்க ஒருவரால் 300 அடி தூரம் குறி தவறாமல் வீச முடிகிறது'' என்று கூறியுள்ளார்.
இந்த ஆயுதம் தமிழருக்கும் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும் பொதுவானதுதெற்காசியாவிலிருந்து 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ஆஸ்திரேலிய பழங்குடியினர்அங்கு குடிப்பெயர்ந்து சென்றதாகவும்அவர்களின் மொழிகலாசாரம்பண்பாடு உருவ அமைப்பு முழுவதும்தமிழரோடு ஒப்புமை உடையது எனவும் கூறியுள்ளனர்.
தமிழர்களின் வளரியைப் பற்றி அக்காலத்தில் புதுக்கோட்டை திவானாய் விளங்கியவர் தர்ஸ்ட்டனுக்கு எழுதியிருப்பதுவளரியின் அமைப்புபற்றியும் அது பயன்பட்டு வந்தவிதம் பற்றியும் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.

""
வளரி என்பது இழைக்கப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட சிறு ஆயுதம்சில சமயங்களில் இரும்பினாலும் செய்யப்படுவதுண்டுபிறைவடிவிலான அதன் ஒரு முனைப்பகுதி அடுத்ததை விடக் கனமாய் இருக்கும். (அரிவாள் அல்லது கத்தியைப் போல் அல்லாமல்இதன் வெளிவிளிம்பே கூர்மைப்படுத்தப் பட்டிருக்கும்இதை எறிவதில் பயிற்சி உள்ளவர்கள்இதன் லேசான முனையைக் கையில் பிடித்துவேகம்கொடுப்பதற்காகச் சிலமுறை தோளுக்கு உயரே சுழற்றி விசையுடன் இலக்கை நோக்கி வீசி எறிவார்கள்.
ஒரே எறியில் குறி வைக்கப்பட்ட விலங்கையோஏன் மனிதரையோ கூட வீழ்த்தும் படி வளரியால் எறியும் வல்லமை படைத்தவர்கள்உண்டெனத் தெரிகிறதுஆனால்தற்சமயம் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றே கூறும்படியான நிலை உள்ளதுஆனாலும்தற்சமயம்முயல்குள்ளநரி முதலியவற்றை வேட்டையாடுவதற்கு வளரி பயன்பட்டு வருவதாகத் தெரிகிறதுஇருந்த போதிலும்வளரியின் வாழ்வுமுடிந்து கொண்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.  பெரிய பாண்டியர்தெப்பக்குளத்தின் வடகரையில் இருந்துஎறிந்த வளரிஅதன் மைய மண்டபத்தைத் தீண்டாமல் அதையும் தாண்டி எதிர்கரையில் உள்ள முத்தீசுபுரத்தில் போய் வீழ்ந்ததாம்அதுவும்எதிர்கரையிலிருந்த ஆலமரக் கொப்புக்களைக் கத்தரித்துஅதைக் கடந்து வீழ்ந்ததாம்இது இக்கால ஒலிம்பிக் சாதனையை விட அதிகதூரமாகும் என ஆய்வாளர் மீ.மனோகரன் "மருதுபாண்டிய மன்னர்கள்என்ற நூலில் வியப்புடன் கூறுகிறார்.
தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் பெரும் முயற்சியால் தமிழக அரசு சிலம்பாட்டத்தை பள்ளிகளில் விளையாட்டாக அங்கீகரித்துள்ளது.பூ.திருமாறன் அவர்களின் பெரும் முயற்சியால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டிசமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாகவும் நடத்தப்படுகிறது.
பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்தென்பாண்டி தமிழரின் "சிலம்பவரலாறும் அடிமுறைகளும்'  என்ற நூலை வெளியிட்டுள்ளது.


                                                                                                  நன்றி..சாந்தன்

1 comment: