மாங்காடு (ஆங்கிலம் :
Mangadu),
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் அமைந்துள்ள இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும். இதன் அஞ்சல் குறியீட்டு எண் 622304.
கோவில்கள்
*ஏனது கிராமத்தில் உள்ள முக்கியமான கோவில்கள்
மத நம்பிக்கை
இப்பகுதி மக்கள் பெரும்பாலும் இந்து சமயத்தையே பின்பற்றுகின்றனர்.இருந்தும் இந்துசமய சடங்குகளை குறிப்பாக திருமண சடங்குகளில் பின்பற்றப்படும் புரோகிதர்,கோமம்,பற்பல பூஜைகள் போன்றவைகள் பின்பற்றுவது இல்லை!.அனைத்து மக்களும் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
மாங்காட்டின் தொழில்
மக்கள் அனைவரும் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர்.அதுவே அவர்களில்
வாழ்வாதாரம்.இங்கு முக்கியமாக
கடலை,
சோலம் வாழைகரும்பு,பல வகையான மலர்கள்(
மல்லிகை,
அரும்பூ,
ரோஜா,
முல்லை) பல வகையான காய்கறிகள்(
கத்தறி,
புடலை,
பாவை,பயறு வகைகள்)போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது நிலத்தடிநீர் மட்டமானது 250
அடி வரை சென்றுள்ளது.வானம் பார்த்த பூமி்யாக இருந்து வந்த இப்பகுதி தற்போது பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. நிலத்தடி நீர் மட்ட மாறுபாடானது மழைக் காலங்களில் 12.08
மீட்டர் ஆகவும் கோடை காலங்களில் 24.49
மீட்டர் ஆகவும் உள்ளது.
ஆலயம் மற்றும் விழாக்காலங்கள்
ஆண்டுதோறும்
சித்திரை மாதத்தில் அருள்மி்கு நீரூற்று முத்துமாரி அம்மன் ஆலயத்தில் காப்பு கட்டி 10-14 நாட்கள் திருவிழா நடைபெறும். 8ம் நாள் பொங்கல் விழாவும் 9ம் நாள் அருள்மி்கு நீரூற்று முத்துமாரி அம்மன் தேர்பவனி திருவிழாவும் 10ம் நாள் அம்மன்
மஞ்சள் தீர்த்த உற்ச்சவத்திருவிழாவும் வெகுவிமர்சியாக நடைபெறும்.உலகத்தரம் வாய்ந்த கண்கவர் வான வேடிக்கையும் அப்போது இதே கிராமங்களைச் சேர்ந்த 4 வகையறாக்களால் பல வெவ்வேறு சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும்.
திருமணஞ்சேரிஎன்ற பிரசித்தி பெற்ற புனித தளம் இவ்வூரிலிருந்து சுமார் 8 கிமீ வடக்கில் உள்ளது
அமைவிடம்
புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கான மாநில நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை
நகரத்திலிருந்து சரியாக 31
கிமீ தொலைவிலும் பட்டுக்கோட்டையிலிருந்து 29 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.முற்றிலும் சமதளமுடன் கூடிய பகுதி மற்றும் காய்கறி,மரபழவைகள் உற்பத்தி செய்ய சரியான மண் தன்மைகொண்ட பகுதியாகும்.இங்கு அழகிய பச்சை பசேலென்ற சோலையாக காட்ச்சி அழிக்கும்.
அண்டை கிராமங்கள்
மாங்காடு கிராமத்தினை தொடர்ந்து சில கிராமங்கள் உள்ளன.அவைகள் இக்கிராமத்துடன் நெருங்கிய தொடர்புகளைகொண்டுள்ளன.
வடகாடு,கொத்தமங்கலம்,
கீரமங்கலம்*,
குளமங்கலம்,
அனவயல்,புள்ளான்விடுதி,
மேற்பனைக்காடு போன்ற கிராமங்கள் இக்கிராமத்தினை ஒட்டிய பகுதிகளாகும்.இக்கிராமங்களுக்குள்ளேயே திருமணங்கள் செய்துகொள்கிறார்கள்.ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் சில கட்டமைப்புகளைக் கொண்டுள்ளார்கள் அக்கட்டமைப்பினை பின்பற்றுவதையே கலாச்சாரம்,பண்பாடு என்று பெருமையுடம் கூறுவதை இப்பகுதியில் காணலாம்.
| ஆலங்குடி | கறம்பக்குடி | நெடுவாசல் | |
வடகாடு் | | அணவயல் |
மாங்காடு |
|
கொத்தமங்கலம் | சேந்தங்குடி | கீரமங்கலம் |
No comments:
Post a Comment