அன்பிற்கினிய உறவுகளே,
மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் உணர்ச்சிகள் என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட இயல்பான ஒரு விடயமாகும். தனி மனிதன் ஒருவனது உடல் இச்சையோடு தொடர்புடைய விடயங்கள் பொதுச் சந்தைக்கு வருகின்ற போது, அம் மனிதனைச் சூழ்ந்துள்ள தனிப்பட்டவர்களின் கருத்துக்குக்களால், அவனது எதிர்கால வாழ்வும், மன விரக்தி எனும் நிலையினை நோக்கியே தள்ளப்படுகின்றது.
இன்று நமக்குக் கிடைத்துள்ள நவீன தொழில் நுட்ப தொடர்பாடல் சாதனங்களின் விருத்தியினால், நமக்கு எவ்வளது வீதம் நன்மைகள் உள்ளனவோ, அத்தனை வீதம் தீமைகள் - பாதிப்புக்கள் உள்ளன. பள்ளி செல்லும் மாணவர்களில் குறிப்பிட்ட ஒரு பருவ வயதினை எட்டியவர்களின் கைகளில் தொடர்பாடல் சாதனங்களின் பாவனையும் அதிகமாகவே காணப்படும். இதற்கான பிரதான காரணம், தனது நண்பர் ஒருவர் புதிதாக வந்த எலக்ட்ரானிக் பொருளை வைத்திருக்கிறாரே எனும் நோக்கில் தாமும் வாங்கி உபயோகிக்கத் தொடங்குதலாகும்.
நிரூபனின் நாற்று வலையிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
டீன் ஏஜ் பருவம் என்பது உணர்ச்சிகளுக்கு விடுதலை கொடுக்க உடல் துடிக்கின்ற பருவமாகும். மனதளவில் ஏற்படும் விருப்பு வெறுப்புக்களில் அதிகமானவை உடல் சார்ந்த இச்சையினை அடிப்படையாகக் கொண்டே தோன்றுகின்ற ஒரு பருவமாகும். ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கலவன் பாடசாலையாயினும் சரி, தனியார் பாடசாலையாயினும் சரி, அங்கே கல்வி கற்கும் இளைஞர்களும், யுவதிகளும் தம்மை அறியாமல் உணர்ச்சியால் தூண்டப்பட்டோ, அல்லது சினிமா- பலானா காட்சிகளின் விரக தாபத்தினால் பாதிக்கப்பட்டோ, தம் உடலியற் தேவையினை நிறைவேற்றும் நோக்கில் காதல் எனும் வலையில் வீழ்ந்து விடுகிறார்கள்.
நிரூபனின் நாற்று வலையிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
இவ்வாறு காதலில் விழுந்தவர்களால் தான், இன்றைய காலகட்டத்தில் தமது அந்த நிமிடச் சுக போகங்களுக்காக கமரா போன் மூலம் எடுக்கப்படும் வீடியோக் கிளிப்ஸ்கள், (Scandal Video Clips) இணையத்தில் ஏறி, உலகெங்கும் பரவி, எம் சந்ததிகளின் எதிர்கால வாழ்வினைக் குட்டிச் சுவராக்கி, பல பள்ளி மாணவர்கள் தம் இளம் வயதில் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டு தெருவில்நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றார்கள். ‘காதலெனும் கடலில் மூழ்கிப் பார்க்க நினைத்து, தனியே சந்த்தித்துக் கொள்ளும் இளம் உள்ளங்கள் ‘ தம் அந்தரங்க நிகழ்வுகளைப் பிற் காலத்திலும் பார்க்கலாம் எனும் நோக்கில் வீடியோக்களைத் தம் வசம் உள்ள கமரா போன்களின் உதவியுடன் பதிவு செய்து கொள்கிறார்கள்.
இவ்வாறு பதிவு செய்யப்படும் வீடியோக்களானது, ''அலைபேசியானது நண்பர்களிடமிருந்து கைம்மாறும் பொழுதுகளில், வக்கிர குணம் கொண்ட நண்பர்களின் கைகளில் அகப்படும் பொழுது அது முழு நீலப் படமா இணையங்களுக்கு விலை பேசப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றது. இதனை விட இளம் ஜோடிகளின் காதல் முறிவடைகின்ற போது, வீடியோவினை எடுத்த இளம் பெண்ணின் காதலனே, அப் பெண்ணினைப் பழிவாங்கும் நோக்கில் இணையத் தளங்களில் வீடியோக்களை உலாவர விடுகின்ற சந்தர்ப்பங்களையும் நாம் அறிந்திருக்கின்றோம்.
நிரூபனின் நாற்று வலையிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
‘ஏண்டி செல்லம், இப்படி ஒரு சந்தர்ப்பம் நமக்கு மீண்டும் வாய்க்குமா?
இதனை ரெக்கார்ட் பண்ணி வைச்சால், நாம லைப் பூராப் பார்த்து மகிழலாமே, எனும் சாயம் பூசப்பட்ட மொழிகளுக்கு அடிமையாகித் தான் இளம் மாணவிகள் பலர் தம் பள்ளி வாழ்வினைப் பறி கொடுத்திருக்கிறார்கள். இன்னொரு விடயம் தற்போதைய 2G தொழில்நுட்பத்தின் காரணமாக, காதலனோ காதலியோ பேசும் போது, எம். எம்.எஸ் மூலம் படங்களைப் பரிமாறிக் கொள்ளுவது. இதன் மூலமும் பல அப்பாவிப் பெண்களை ஏமாற்றும் காமுகர்களான இளைஞர்கள் பெண்களினை மார்பகங்கள் தெரியும் வண்ணம் போட்டோ எடுத்துத் தருமாறு கோரிக்கை விடுத்து அவற்றினைப் பின்னர் தம் கபட நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள்.
இப் பதிவினை நான் வழமை போல நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
இவை எல்லா ஊர்களிலும் தொடர்ச்சியாக நடக்கும் செயல் என்று கூறமுடியாது. அதே போல இப் பதிவினூடாக, ஒட்டு மொத்தப் பள்ளி மாணவர்களும் இவ்வாறான பலானப் படங்களை விற்றுப் பிழைக்கும் ஈனத் தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என்றும் கூற முடியாது. எம் சமூகங்களில் எங்காவது ஒரு பிரதேசத்தில் நாளொன்றுக்கு எனும் விகிதத்தில் இச் சம்பவங்களானது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இப் பதிவினை நான் வழமை போல நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
மேற் கூறப்பட்ட தகவல்களை என் கட்டுரையினூடாக உங்களுக்கு முன்னுதாரணமாக்கி, வாசக உள்ளங்களாகிய உங்களிடம் ஒரு சில வினாக்களை முன் வைக்கின்றேன். வருங்காலத்தில் தந்தையாகப் போகின்றவர்களிடம், பெற்றோர்களிடம்;
இன்றைய பொறுப்புள்ள இளைஞர்களாகவும்- நாளைய எம் நாட்டின் தூண்களாகவும் விளங்கும் உள்ளங்களிடம் என்னுடைய ஐயங்களையும், மன உணர்வுகளையும் விவாத மேடை எனும் பகுதியினூடாக விட்டுச் செல்லுகின்றேன்.
இப் பதிவினை நான் வழமை போல நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
*உங்களது பிள்ளைகள் குறிப்பிட்ட ஒரு வயதினை அடையும் போது, தொழில்நுட்ப விடயங்களில் அப் பிள்ளை மீதான உங்களது கவனம் எவ்வாறு அமைந்து கொள்ளும்?
*பள்ளி செல்லும் இள வயதினரைத் அலைபேசிப் பாவனையிலிருந்து எவ்வாறு நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்? பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அலைபேசி அவசியம் தானா?
இப் பதிவினை நான் வழமை போல நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
*சந்தர்ப்ப சூழ் நிலைகளால், இவ்வாறான பாலியல் படங்கள் வெளிவருகின்ற போது, இச் சம்பவம் மூலம் பாதிக்கப்படும் குறிப்பிட்ட மாணவியையோ அல்லது மாணவனையோ நல் வழிப்படுத்த நாம் எவ்வாறான திட்டங்களை முன் வைக்கலாம்?
இப் பதிவினை நான் வழமை போல நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
*தவறுதலாக உங்கள் சமூகத்தில், உங்கள் உறவினர் வீடுகளில் ஏன் உங்கள் குடும்பங்களில் இப்படியான ஓர் சூழ் நிலை இடம் பெற்றால், அதிலிருந்து உங்களின் பிள்ளைகளை மீட்டெடுத்து அறிவுரை கூறி நல்வழிப்படுத்த நீங்கள் முயலுவீர்களா? இல்லை வீட்டை விட்டு விரட்டி வைப்பது தான் சிறந்தது என்று ’’ஊரின் கௌரவம் எனும் சொல்லுக்குக்’ கட்டுப் பட்டு உங்களின் பிள்ளைகளைப் புறக்கணிப்பீர்களா?
இப் பதிவினை நான் வழமை போல நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
*பொறுப்புள்ள சகோதர- சகோதரியாகவோ, அல்லது பெற்றோராகவோ அல்லது ஒரு நெருங்கிய உறவினர்- நண்பராகவோ;
உங்கள் வீட்டில் உள்ள சிறுவாண்டுகள் பெரியவர்களாகிக் குறிப்பிட்ட ஒரு வயதினை அடையும் போது உங்களால் இவ்வாறான விடயங்களில் எவ்வாறு புத்திமதி கூற முடியும்?
இப் பதிவினை நான் வழமை போல நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
*இனிவருங் காலங்களில் எம் சமூகத்தில் எங்காவது ஒரு இடத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறா வண்ணம் எம் இளைய சமூகத்தினைப் பாதுக்காத்துக் கொள்ளப் பள்ளிகள் தோறும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளையோ அல்லது, விழிப்புணர்வுத் திட்டங்களையோ ஏற்படுத்த வேண்டுமா?
இப் பதிவினை நான் வழமை போல நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
மேற்படி வினாக்களை உங்களின் சிந்தனைக்காக இங்கே பகிர்ந்து கொள்கின்றேன். பள்ளி மாணவர்களின் விளையாட்டுப் புத்தி அல்லது சிறு பிள்ளைப் புத்தி மூலம் அந்தரங்க உறவுகள் படம் பிடிக்கப்பட்டு இணையங்களிற்கு விற்பனைக்காகவும், பழி வாங்கும் நோக்கிலும் அனுப்பப்படும் செயற்பாடுகள் எம் தமிழ்ச் சமூகத்தில் நாளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் எங்காவது ஓரிடத்தில் இடம் பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. அது நாளை எம் வாசற் படிகளையும் எட்ட முன்னர் தடுப்பதும், அதனை எதிர் கொள்வதற்கேற்றவாறு எம் குழந்தைகளைத் தயார் செய்வதும் எம் கடமையல்லவா.
உங்களது மன உணர்வுகளையும், விவாத மேடையினூடாகப் பகிர்ந்து கொள்ளலாமல்ல